மகளிர் இலவச பயணம்
திருப்பூர்; 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்டத்தில் இலவச பஸ் பயணம் செய்யும் பெண்கள், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை பணிமனைகளிலிருந்து, மொத்தம் 254 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து பெண்களுக்கும், சாதாரண கட்டண பஸ்களில், இலவசமாக பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2021, ஜூலை முதல் நடப்பாண்டு நவம்பர் மாதம் வரை, 17 கோடியே 81 லட்சத்து 70 ஆயிரத்து 520 பேர் இலவசமாக பயணித்துள்ளனர். 17 கோடியே 70 லட்சத்து 22 ஆயிரத்து 275 பெண்கள்; 10 லட்சத்து 70 ஆயிரத்து 902 மாற்றுத்திறனாளிகள்; திருநங்கைகள் 77,343 இலவசமக பயணித்துள்ளனர்.