உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் கூடும் தொழிலாளர்கள்; நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

ரோட்டில் கூடும் தொழிலாளர்கள்; நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

பல்லடம்; தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடும் தொழிலாளர்களால், பல்லடத்தில், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.பல்லடம், கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். ஒவ்வொரு நொடிக்கும், இரண்டு வாகனங்கள் வீதம், தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன. இவ்வாறு, வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில், தொழிலாளர்கள் தினசரி ஒன்று கூடுவது விபத்துக்கு வழி வகுப்பதாக உள்ளது.கட்டட கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், பல்லடம் அரசு மருத்துவமனை எதிரே, தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடுகின்றனர். நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், காலை நேரத்தில் இவ்வாறு கூடுவது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும், காலை நேரத்தில், ஏராளமான பெற்றோர்கள், குழந்தைகளுடன், இருசக்கர வாகனங்களில் செல்வதும், பள்ளி, கல்லுாரி வாகனங்களில் செல்வதும் என, ரோடு, மிகவும் பரபரப்பாக காணப்படும். நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதுபோன்று ரோட்டில் ஒன்று கூடுவதால், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி தொழிலாளர்களுக்கும் விபத்து அபாயம் உள்ளது. தொழிலாளர்கள், இதுபோன்று ரோட்டில் ஒன்று கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான ஏதாவது ஒரு இடத்தில் தொழிலாளர்களை காத்திருக்க வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை