மேலும் செய்திகள்
குளிர்ந்த சீதோஷ்ண நிலை உலர்களங்களில் பாதிப்பு
02-Jan-2025
பொங்கலுார், ; திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், பொங்கலுார், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உலர் களங்கள் பெருமளவில் செயல்படுகின்றன. கொப்பரை உற்பத்தி வெளியூர் தொழிலாளர்களை நம்பியே உள்ளது. தற்போது, பொங்கல் பண்டிகையை கொண்டாட உலர் களங்களில் வேலை பார்த்த பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு பயணம் ஆகின்றனர். உலர்கள உரிமையாளர்கள் கூறுகையில், கொப்பரை கிலோ, 150 ரூபாய் வரை விற்பனை ஆனாலும் தேங்காய் இல்லாமல் பெரும்பாலான உலர் களங்கள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சொந்த ஊர் சென்ற தொழிலாளர் சிலர் சொந்த ஊரிலேயே தங்க வாய்ப்பு உள்ளது. அப்படி அவர்கள் திரும்பி வராவிட்டால் அவர்கள் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இழக்க நேரிடும். தேங்காய் வரத்து இல்லாததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களும் திரும்ப வராவிட்டால் அடுத்த சீசன் வரும் பொழுது உலர் களங்களுக்கு சோதனையான காலமாக அமைந்து விடும்'' என்றனர்.
02-Jan-2025