உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டம்

அவிநாசி வட்டம், சேவூர் ஊராட்சி, சூரிபாளையம் பகுதியில் உள்ள ஆடை நிறுவனத்தில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போனஸ் குறைக்கப்பட்டுள்ளது; விடுமுறைச்சம்பளம் அளிக்கப்படவில்லை என்று புகார் கூறினர். ஏ.ஐ.டி.யு.சி., பனியன் பேக்டரி லேபர் யூனியன் மாவட்ட தலைவர் மோகன், பொதுச் செயலாளர் சேகர் ஆகியோர் ஆடை நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஊதிய முறைப்படி போனஸ் வழங்கவும், முன்னுரிமை அடிப்படையில் போனஸ் சதவீதம் உயர்த்தி தரவும் உடன்பாடு ஏற்பட்டது. உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. ஆடை நிறுவனத்தரப்பில் கூறுகையில், ''ஆர்டர் கொடுத்த நிறுவனத்திடம் இருந்து உரிய நேரத்தில் தொகை வரவில்லை. இதனால்தான் தாமதமானது; அனைவருக்கும் போனஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை