மேலும் செய்திகள்
யோகா கல்லுாரி சார்பில் உலக அமைதி பேரணி
08-Nov-2025
உடுமலை: உலக அமைதி தினத்தையொட்டி, பள்ளிகளில் அமைதி உறுதிமொழியை மாணவ, மாணவியர் நேற்று ஏற்றுக்கொண்டனர். உலக அமைதிக்காக ஆண்டுதோறும், நவ., 11ல், உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடுமலை கரட்டுமடம், காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளியில் உலக அமைதி தின நிகழ்வில், பள்ளி தலைமையாசிரியர் செந்தில்வேல் தலைமை வகித்தார். திருமூர்த்திநகர் ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லுாரி மாணவியர், மதுமிதா, கவிப்பிரியா, திரிஷா ஆகியோர் மாணவர்களுக்கு உலக அமைதி தினத்தின் முக்கியத்துவம் குறித்து கூறினர். மாணவர்கள் ஒரு நிமிட அமைதியை கடைபிடித்தனர். மேலும், உலக அமைதி உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அசோக்குமார் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். * உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்விக்கழகத்தின் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சேஷநாராயணன் வரவேற்றார். திருமூர்த்தி மலை ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரியின் நிறுவனர் குருமகான், காணொளி வாயிலாக உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். உடுமலை விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பார்வதி நன்றி தெரிவித்தார்.
08-Nov-2025