உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / யோகா கல்லுாரி சார்பில் உலக அமைதி பேரணி

யோகா கல்லுாரி சார்பில் உலக அமைதி பேரணி

உடுமலை: உடுமலையில், திருமூர்த்திநகர் உலக சமாதான ஆலயம் மற்றும் ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லுாரி சார்பில், உலக அமைதிப்பேரணி நடக்கிறது. திருமூர்த்திநகரிலுள்ள, உலக சமாதான ஆலயம், ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லுாரி சார்பில், நாளை (9ம் தேதி) காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை, உடுமலையில், உலக அமைதிப்பேரணி நடக்கிறது. உடுமலை நேதாஜி மைதானத்தில் துவங்கும் இப்பேரணி பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு, என, நகரின் பிரதான ரோடுகள் வழியாக சென்று, குட்டை திடலில் நிறைவு பெறுகிறது. இதில், உலக சமாதான ஆலயத்தின் மெய் உணர்வாளர்கள், யோகா கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை