உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உலக சாதனை கும்மியாட்டம்

உலக சாதனை கும்மியாட்டம்

அனுப்பர்பாளையம்: காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை, அழகு வள்ளி கலைக்குழு இணைந்து நடத்திய உலக சாதனை கும்மியாட்ட நிகழ்ச்சி பெருமாநல்லுாரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. பா.ஜ., மூத்த நிர்வாகி தமிழிசை சவுந்தர்ராஜன், கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்து கலைஞர்களுடன் கும்மியாடினார்.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி, 4:30 மணிக்கு தொடங்கி 7:00 மணி நேரம், 7 நிமிடம் 7 வினாடிகள் தொடர்ந்து நடைபெற்றது. கும்மியாட்டத்தில், சிறுமிகள், பெண்கள் உள்பட 333 கலைஞர்கள் கலந்து கொண்டு மூன்று குழுக்களாக பிரிந்து தொடர்ந்து ஆடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை