உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கத்தி போட்டு வழிபாடு; தீர்த்தக்குடத்துடன் ஊர்வலம்

கத்தி போட்டு வழிபாடு; தீர்த்தக்குடத்துடன் ஊர்வலம்

உடுமலை; அருள் தரும் அன்னையான உடுமலை மாரியம்மனுக்கு, தேவாங்க சமூக மக்கள், ஆண்டுதோறும் கத்தி போட்டு, சக்தி கும்பம் எடுத்து வந்து, வழிபாடு செய்கின்றனர்.நகரில் ஆதிசக்தியாக அருள்பாலிக்கும் மாரியம்மனுக்கு, நோன்பு சாட்டியதும், அனைத்து சமுதாயத்தினரும், கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். 'கத்தி போட்டு' தங்கள் மரியாதையை செலுத்தி வழிபாடு நடத்தினர்.பூமாலை சந்திலுள்ள, சவுண்டம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம், திருமஞ்சனம், சக்தி கும்பம் ஆகியவற்றுடன் ஊர்வலம் துவங்கியது.சதாசிவம் பிள்ளை வீதி, வ.உ.சி., வீதி, தளி ரோடு, பெரியகடை வீதி வழியாக ஊர்வலமாக சென்ற மக்கள், தங்கள் உடலில் கத்தி போட்டபடி உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். உடன் பெண்கள், முளைப்பாரி எடுத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை