எழுத்தாளர் சங்க மாநாடு
தாராபுரம்,: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்க கிளை மாநாடு, தாராபுரத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் கிளை தலைவர் மனுவேல் தலைமை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தொடக்க உரையாற்றினார். சங்கத்தின் பணிகள் குறித்து ஆலோசித்தனர். சங்க நிர்வாகிகள் சீரங்கராயன், குப்புசாமி, கண்ணுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.