உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுமக்களுக்கு யோகா பயிற்சி

பொதுமக்களுக்கு யோகா பயிற்சி

உடுமலை; உடுமலை மனவளக்கலை மன்றத்தின் சார்பில், கிருஷ்ணாபுரத்தில் இலவச யோகா பயிற்சி நடந்தது.பொதுவாக மன அமைதி, புத்துணர்ச்சி, உடல் நலம் போன்றவைக்காக மக்கள் யோகா பயிற்சியை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக, அரசு சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இதற்காக ஆண்டு தோறும் சர்வதேச யோகா தினமும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் தனியார் மண்டபத்தில், மனவளக்கலை மன்றத்தின் சார்பில், பொதுமக்களுக்கு இலவச யோகா பயிற்சி ஐந்து நாட்கள் நடந்தது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மனவளக்கலை நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ