உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிரைவர், நடத்துனராக விண்ணப்பிக்கலாம்

டிரைவர், நடத்துனராக விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்; அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள டிரைவர், நடத்துனர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள ஏழு கோட்டங்களில், 3,274 டிரைவர், நடத்துனர் பணியிடம் காலியாக உள்ளது. கோவை மண்டலத்தில், ஈரோட்டில், 119, ஊட்டியில், 67, கோவையில், 190, திருப்பூரில், 58 என மொத்தம், 344 இடங்கள் காலியாக உள்ளது.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவர் லைசன்ஸ் பெற்று, 18 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடத்துனர் பணிக்கான சான்றிதழ் மற்றும் 'பேட்ஜ்' வைத்திருக்க வேண்டும். 2025 ஜூலை, 1ம் தேதியின்படி, 24 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், இதர பிரிவினருக்கான சலுகைகளை www.arasubus.gov.inஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். எழுத்து, நேர்முகத்தேர்வு, ஓட்டுனர் பணித்தேர்வு ஆகியவற்றின் மூலம் தொழிலாளர் தேர்ந்தெடுக்கப்படுவர்.வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து கழகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை