உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூஜை போட்டீங்களே... ரோடு போட்டீங்களா! பொதுமக்கள் கேள்வி

பூஜை போட்டீங்களே... ரோடு போட்டீங்களா! பொதுமக்கள் கேள்வி

திருப்பூர்; நிதி ஒதுக்கி எட்டு மாதமாகியும் புதிய ரோடு போடப்படாததால், விசாரணை நடத்த கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், சமூக ஆர்வலர் சரவணன், கழுத்தில் பேனர் அணிந்தவாறு பங்கேற்றார். 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பூமி பூஜை போடப்பட்ட பகுதியில் சாலையை காணவில்லை என மனு அளித்தார்.சரவணன் கூறியதாவது:திருப்பூர், போயம்பாளையம் அரசு பள்ளி எதிரே உள்ள ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதியில், புதிய ரோடு போடுவதற்காக, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை போடப்பட்டது.எட்டு மாதமாகியும் இன்னும் புதிய ரோடு அமைப்பதற்கான எந்த பணியையும் துவக்கவில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனதென்றே தெரியவில்லை. குண்டும் குழியுமான ரோட்டில் மழைநீர் தேங்குகிறது. அவசர தேவைக்கு, ஆம்புலன்ஸ் கூட செல்ல முடிவதில்லை. பூமி பூஜை மட்டும் நடத்திவிட்டு, சாலை அமைக்காதது சந்தேகத்தை கிளப்புகிறது. இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்தவேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியில், புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை