யங் இந்தியன்ஸ்- மாசூம் பள்ளியில் விழிப்புணர்வு
திருப்பூர்; திருப்பூர் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் 'மாசூம்' குழு சார்பில், பெம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'சைல்டு ெஹல்ப்லைன் -1098' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்திய தொழிற்கூட்மைப்பு (சி.ஐ.ஐ.,) திருப்பூர் மாவட்ட கிளையில், பல்வேறு கிளை அமைப்புகள் இயங்கி வருகின்றன. அதன் ஒருபகுதியாக, குழந்தைகள் நலன் காக்கும் அமைப்பாக, 'மாசூம்' என்ற குழு இயங்கி வருகிறது. பள்ளிகள் தோறும் சென்று, மாணவ, மாணவியருக்கு, பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. முதல் நாளான நேற்று, குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இயக்கங்கள் நடத்தப்பட்டது.திருப்பூர் பெம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் பாதுகாப்புக்கான, 'சைல்டு ெஹல்ப் லைன்' எண் - 1098' என்ற எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர், 1,098 பேர் கரம் கோர்த்து நின்று, '1098' என்ற 'டோல் ப்ரீ' எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தேவையான உதவிகளுக்கு, 1098 என்ற 'சைல்டு ெஹல்ப் லைன்' சேவையை பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் 'மாசூம்' குழு தலைவர் மேனகா பொன்னுசாமி, துணை தலைவர் சித்ரா, 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் தலைவர் நிரஞ்சன், துணை தலைவர் மோகன், நிர்வாகிகள் லாவண்யா, சுகன்யா மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.