உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மினி பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

மினி பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

பல்லடம்: பல்லடத்தில் மினி பஸ்சை மறித்து, டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பல்லடம், நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால், 22. இவருக்கு, தனது மனைவியுடன் குடும்ப பிரச்னை ஏற்பட்டது.இதன் காரணமாக, அவர் வீட்டை விட்டு கிளம்பி பெற்றோர் வீட்டுக்கு செல்ல பல்லடத்தில் இருந்து, வளையபாளையம் செல்லும் மினி பஸ்சில் சென்றார். இதனையறிந்து, பஸ்சில் ஏறிய கணவர், மனைவியுடன் தகராறு செய்து, பஸ்சை நிறுத்த கூறினார்.ஆனால், பஸ் நிற்காமல் சென்றது. இதனால், ஆத்திரமடைந்த கோபால் தனது நண்பர்கள், நான்கு பேரை அழைத்து சென்று, மினி பஸ் திரும்பி பல்லடம் நோக்கி வரும் போது, மாதப்பூர் அருகே வழி மறித்து, டிரைவர் சுரேஷ், 36 என்பவரை தாக்கினார். தொடர்ந்து, பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்தினார். புகாரின் பேரில், கோபாலை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ