உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகரில் நுழைய வாலிபருக்கு தடை

மாநகரில் நுழைய வாலிபருக்கு தடை

திருப்பூர்; திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், திருட்டு வழக்கில் தொடர்புடைய ஓட்லா விஜய், 32 என்பவர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, திருப்பூர் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். l அனுப்பர்பாளை யம் போலீஸ் ஸ்டேஷன் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள கூழை கணேஷ், 25, என்பவர், தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநகர காவல் சட்டத்தின் படி, திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நுழைய, ஓராண்டு தடை விதித்து, திருப்பூர் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ