இளைஞர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
உடுமலை; உடுமலையில், கழுத்து அறுபட்ட நிலையில், இளைஞர் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.உடுமலை சிவசக்தி காலனியைச்சேர்ந்தவர் நவீன்குமார், 34; பெயின்டர். பெற்றோர் இல்லாத நிலையில், தனது தம்பி நந்தகுமாருடன், வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை நவீன்குமார் உடல், கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் கிடந்துள்ளது. உடலை கைப்பற்றிய உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.