உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுரைக்காய் விலை உயர்வு

சுரைக்காய் விலை உயர்வு

பொங்கலுார் :குறைவான தண்ணீரில் நல்ல விளைச்சலை கொடுக்கக் கூடியது சுரைக்காய். இதற்கு உற்பத்தி செலவு மிகவும் குறைவு. இதில் பாம்பு சுரை, கும்பச்சுரை என இரண்டு மூன்று ரகங்கள் உள்ளது. வைகாசி பட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியதால் விவசாயிகள் சுரைக்காய் சாகுபடி செய்திருந்தனர். அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது சுரைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இது விவசாயிகளை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. பொங்கலுார் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி விலை உயர்ந்ததால் அதற்கு மாற்றாக சுரைக்காயை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனால் ஒரு காய், 25 ரூபாய் வரை விலை போகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை