உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு

பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு

பீரோவை உடைத்து 30 பவுன் நகை திருட்டுஆரணி: திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்ற, கூலி தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து, 30 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கராஜ், 42. இவர், குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு, நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கு சென்றார்.நேற்று அதிகாலை, தங்கராஜ் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 30 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.ஆரணி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ