உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / இன்ஸ்டா காதலியை கர்ப்பமாக்கி கருக்கலைத்த காதலனுக்கு கம்பி

இன்ஸ்டா காதலியை கர்ப்பமாக்கி கருக்கலைத்த காதலனுக்கு கம்பி

ஆரணி:'இன்ஸ்டா'வில் பழகிய 23 வயது பெண்ணை கர்ப்பமாக்கி, பின் கருக்கலைப்பு செய்து,திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவையைச் சேர்ந்தவர் நிக்கிலன், 23; பி.இ., பட்டதாரி. இவருக்கும், சென்னையில் தனியார் கல்லுாரியில் பிசியோதெரபிஸ்ட் படித்து வந்த, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த, 23 வயது பெண்ணுக்கும் இன்ஸ்டா வாயிலாக பழக்கம் ஏற்பட்டது.நாளடைவில் அது காதலாக மாற, பெண்ணிடம், 4 சவரன் நகை, 3 லட்சம் ரூபாயை நிக்கிலன் வாங்கியுள்ளார். மேலும், பலமுறை கட்டாயப்படுத்தி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில், இளம்பெண் கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய போது, முதலில் கருவை கலைத்துவிடுமாறும், பின்னர், திருமணம் செய்து கொள்வதாகவும் நிக்கிலன் கூறினார்.இதை நம்பி, இளம்பெண் கருவை கலைத்தார். பின்னர், அப்பெண்ணிடம் போனில் பேசுவதை நிக்கிலன் தவிர்த்தார். இதனால், பெண் நிக்கிலனின் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். அவர்கள் இளம்பெண்ணை மிரட்டி அனுப்பி உள்ளனர். ஆரணி அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் நிக்கிலனை கைது செய்தனர். மிரட்டல் விடுத்த வழக்கில் தலைமறைவாக உள்ள நிக்கிலனின் தந்தை முத்துகிருஷ்ணன், தாய்கிருத்திகா ஆகியோரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !