கல்லுாரி கழிப்பறையில் 100 பாம்பு குட்டிகள்
செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் 8,500 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு மாணவியர் கழிப்பறையை சுற்றி முட்புதர்கள் மண்டி காணப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் மாணவியர், கழிப்பறைக்குள் சென்றபோது, 100க்கும் மேற்பட்ட குட்டி பாம்புகள் இருப்பதை கண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். 'கழிப்பறை வெளியே மற்றும் உள்ளே நிறைய பாம்புகள் உள்ளன. யாரும் உள்ளே செல்ல வேண்டாம்' என எழுதி கழிப்பறை கதவில் ஒட்டி, பூட்டி வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக, கல்லுாரி மாணவ - மாணவியர் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அந்த பாம்புகளை பிடிக்க, கல்லுாரி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாணவ - மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.