மேலும் செய்திகள்
மோதியதில் தீப்பிடித்த லாரிகள் டிரைவர் பலி
24-Feb-2025
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், பணியை சரிவர செய்யாத பஞ்., செயலர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.திருவண்ணாமலை கலெக்டராக தர்ப்பகராஜ் பிப்., 3ல் பொறுப்பேற்றார். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 18 யூனியன் பகுதிகளுக்கு நேரடியாக சென்று திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பி.டி.ஓ., அலுவலகங்களில் ஆய்வு கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு பணிகள் விரைந்து முடிக்கவும், முறையாக நிதியை பயன்படுத்தவும் அறிவுரை கூறி வருகிறார்.பிப்., 28ல் திருவண்ணாமலை பி.டி.ஓ., அலுவலகத்திலும், அன்று மாலை, 3:00 மணிக்கு செங்கம் பி.டி.ஓ., அலுவலகத்திலும் ஆய்வு கூட்டம் நடத்தினார்.அப்போது, கண்டியாங்குப்பம் பஞ்., செயலர் தவமணி, வரி வசூல் செய்யாமல் இருப்பது, ஆய்வு கூட்டத்தில் உரிய முன் அனுமதி பெறாமல் பங்கேற்காதது, செ.நாச்சிப்பிட்டு பஞ்., செயலர் சவுந்தர்ராஜன் வரி வசூல் செய்யாமலும், பஞ்., கணக்குகள் மற்றும் பதிவேடுகளை முறையாக பராமரிக்காததாலும், இருவரையும் சஸ்பெண்ட் செய்து, நேற்று கலெக்டர் உத்தரவிட்டார்.
24-Feb-2025