உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / புதுச்சேரி பிரபல ரவுடி தி.மலையில் வெட்டிக்கொலை

புதுச்சேரி பிரபல ரவுடி தி.மலையில் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை : புதுச்சேரி ரவுடி, திருவண்ணாமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், நீலந்தாங்கல் பெரிய ஏரி அருகே நேற்று காலை, கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. வேட்டவலம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், புதுச்சேரி, இந்திரா நகரை சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன், 42, என தெரிந்தது. அவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததும், அவர் மீது புதுச்சேரியில் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.நீலந்தாங்கல் ஏரிக்கரையில், நண்பர்களுடன் கும்பலாக அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு அவர் சீட்டு விளையாடியுள்ளார். அப்போது, உடன் வந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில், அவர்கள் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியது தெரியவந்தது. வேட்டவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை