ஓ ட்டல் தொழிலாளி மனைவியுடன் தற்கொலை
ஆரணி:ஆரணி அருகே, கடன் தொல்லையால், மனைவியுடன் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன், 58. இவரது முதல் மனைவி அலமேலு, 2வது மனைவி பூங்கோதை ஆகிய இருவரும் உடல் நல குறைவால் இறந்து விட்டனர்.மூன்றாவதாக சாமுண்டீஸ்வரி என்பவரை ராஜாராமன் திருமணம் செய்து கொண்டார். இருவரும், ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் கிராமத்திலுள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தனர். இருவரும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினர். பணத்தை திரும்ப கேட்டு கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.ராணிப்பேட்டையில் இருந்து ஆரணியிலுள்ள வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்த ராஜாராமனும், சாமுண்டீஸ்வரியும் கடன் தொல்லையால் விரக்தியடைந்து அன்றிரவு, எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.