உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சுவாமி ஊர்வலத்தில் விபரீதம் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

சுவாமி ஊர்வலத்தில் விபரீதம் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

சேத்துப்பட்டு:அங்காளம்மன் பல்லக்கு ஊர்வலத்தில், மின்சாரம் பாய்ந்து ஐ.டி., ஊழியர் பலியானார்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த பழம்பேட்டையை சேர்ந்தவர் செல்வமணி, 53. இவரது மகன் கிஷோர், 20; இவர், சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டு - செஞ்சி சாலையிலுள்ள அங்காளம்மன் கோவிலில், சிவராத்திரியையொட்டி, பூ பல்லக்கு ‍தேரில் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் சுவாமி வீதி உலா நடந்தது.நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், திருவள்ளுவர் தெரு, டிரான்ஸ்பார்மர் அருகே சுவாமி வீதி உலா சென்றபோது, உயரழுத்த மின் கம்பி, பூ பல்லக்கு தேர் உரசியதில், அருகிலிருந்த கிஷோர், அவரது தந்தை செல்வமணி மற்றும் உறவினர் அருணகிரி, 34, ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது.இதில், கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் பலத்த காயமடைந்து, வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ