மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
திருவண்ணாமலை:மாணவியை காதலிப்பதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 10 ஆண்டு கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னுாரை சேர்ந்தவர் கார் டிரைவர் விஜயகுமார், 25. இவர், 2021ல், பிளஸ் 2, படித்து கொண்டிருந்த, 17 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறினார். பின் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மாணவிக்கு உடல்நிலை பாதித்து, மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றபோது, மாணவி, ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. வந்தவாசி மகளிர் போலீசார், விஜய குமாரை போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், விஜயகுமாருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி காஞ்சனா உத்தரவிட்டார். மேலும், மாணவிக்கு அரசு தரப்பில், 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.