ஆற்காடு அருகே வாலிபரை அடித்து கொன்ற 3 பேர் கைது
ஆற்காடு:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டினமங்கலத்தை சேர்ந்தவர் வினோத், 27. இவரது நண்பர் சிறுமூரை சேர்ந்த வெங்கட்குமார், 19. இருவரும் கடந்த, 19ம் தேதி இரவு, 'ஹோண்டா' பைக்கில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சென்று விட்டு, அன்றிரவு, 9:00 மணியளவில் வீடு திரும்பினர். மோசூரில் ஒரு கடையில் பைக்கை நிறுத்தி, டீ குடித்தனர். அப்போது, அவ்வழியாக 'ஹோண்டா' பைக்கில் வந்த மோசூரை சேர்ந்த சக்திவேல், 37, வினோத், 24, ஆகியோர், வெங்கட்குமார் பைக் மீது மோதினர். வெங்கட்குமார், சக்திவேல் காயமடைந்தனர். இதில் ஏற்பட்ட தகராறில், அங்கு வந்த மோசூரை சேர்ந்த வெங்கடேசன், 38, சக்திவேல், வினோத் ஆகியோருடன் சேர்ந்து, ராட்டினமங்கலம் வினோத் மற்றும் வெங்கட்குமாரை தாக்கினர். படுகாயமடைந்த, ராட்டினமங்கலம் வினோத் வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். திமிரி போலீசார் சக்திவேல், மோசூர் வினோத் மற்றும் வெங்கடேசன், ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.