உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ஹீலியம் பலுானில் பறந்த சிறிய ரக செயற்கை கோள்

ஹீலியம் பலுானில் பறந்த சிறிய ரக செயற்கை கோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை : 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' கல்லுாரி'யைச் சேர்ந்த, 42 பேர் அடங்கிய மாணவ - மாணவியர் குழுவினர், 500 கிராம் எடையில், 25,000 ரூபாய் செலவில் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோளை, ஹீலியம் பலுான் மூலம் நேற்று வானில் பறக்க விட்டனர்.சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனும் சி.ஐ.டி., கல்லுாரியைச் சேர்ந்த, 42 மாணவ - மாணவியர் அடங்கிய குழுவினர், குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இத்திட்டத்தில் காற்றின் ஈரப்பதம், தட்ப வெப்பநிலையை கண்டறிய, 25,000 ரூபாய் செலவில் தயாரித்த, 500 கிராம் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்கி, அதை, ஹீலியம் பலுான் மூலம் வானில் பறக்க விடும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடந்தது.இந்த பலுான், 20 கி.மீ., உயரம் வரை பறக்கும். அப்போது, அதிலுள்ள செயற்கைக்கோள் தொடர்ந்து மூன்று மணி நேரம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பும். மேலும், காற்றில் உள்ள ஈரப்பதம், தட்ப வெப்பநிலை ஆகியவற்றை கண்டறியும்.சி.ஐ.டி., கல்லுாரி மாணவர்களின் இந்த முயற்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rangarajan Cv
அக் 01, 2024 17:16

Congrats CIT. Let your mission be successful


Subramanian
அக் 01, 2024 14:39

வாழ்த்துகள், பாராட்டுகள்


vbs manian
அக் 01, 2024 09:22

இந்தியாவின் மினி நாசா.


narayanansagmailcom
அக் 01, 2024 06:33

Congratulations students for your endeavor. Now our union government will support you for all your effort. Try big to achieve as said by our ex. President sir A. P. J. Abdul Kalam


Muthu Kumaran
அக் 01, 2024 06:28

Congratulation


Edi Shivaji
அக் 01, 2024 05:53

இவற்றை எல்லாம் செயற்கை கோள் என்று சொல்லமுடியாது. இவை வெதர் பலூன் போன்றவை. விண்வெளி என்பது காற்று மண்டலத்துக்கு அப்பாற்பட்டது. பூமியிலிருந்து 150 -200 மைல்களுக்கு மேலே.


நிக்கோல்தாம்சன்
அக் 01, 2024 10:41

நன்றிங்க இது போன்ற வெதர் பலூன்கள் டேட்டா எவ்வளவு நாளுக்கு கிடைக்கும்


Kasimani Baskaran
அக் 01, 2024 05:14

கிட்டத்தட்ட விமானம் பறக்கும் உயரத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால் பாதுகாப்பு இல்லாதது. உபகரணம் கீழே விழும் பொழுது விமானங்களின் மீது விழுந்து தொலைக்க வாய்ப்பு உண்டு. போதிய அனுமதி பெறவில்லை என்றால் இது ஆபத்தை உருவாக்கும் நிகழ்ச்சி.


நிக்கோல்தாம்சன்
அக் 01, 2024 04:59

இதனை யூடுபே தளத்தில் லைவ் செய்திருக்கிறார்களா?


naranam
அக் 01, 2024 04:25

இதை செயற்கைகோள் என்பதா அல்லது ஆராய்ச்சிக் கருவிகளுடன் கூடிய ட்ரோன் என்பதா? மாணவர்களின் முயற்சி பாராட்டத்தக்க வகையில் உள்ளது.


சமீபத்திய செய்தி