உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / போலீஸ் கண் முன் தாலியை வீசி தாக்குதல் காதல் மணம் புரிந்த இளம்பெண் தற்கொலை

போலீஸ் கண் முன் தாலியை வீசி தாக்குதல் காதல் மணம் புரிந்த இளம்பெண் தற்கொலை

ஆரணி:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் பூஜா, 21; திருவண்ணாமலை, ஆரணி அடுத்த தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்தார். அப்போது, ஆரணி, கஸ்தம்பாடியிலுள்ள இலங்கை தமிழர் முகாமிலுள்ள பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். முகாமை சேர்ந்த பெயிண்டர் சரண்ராஜ், 19, என்பவருடன் காதல் ஏற்பட்டது. பூஜாவின் பெற்றோர், படிப்பை பாதியில் நிறுத்தி கும்மிடிப்பூண்டிக்கு அவரை அழைத்து சென்றனர்.சில நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறிய பூஜா, சரண்ராஜை திருமணம் செய்து, கஸ்தம்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்தார். பின், பாதுகாப்பு கேட்டு, காதலனுடன் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தார்.கடந்த, 13ல் பூஜா தன் கணவருடன், ஆரணி போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்றபோது, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பிடித்து போலீசார் முன்னிலையில் சரண்ராஜை தாக்கினர். அப்போது, பூஜா அணிந்திருந்த தாலியை கழற்றி வீசி, கஸ்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். மன விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி பூஜா தீக்குளித்தார். வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். களம்பூர் போலீசார் மர்ம மரணம் என, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ