உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தீப திருவிழா பாதுகாப்பு தி.மலையில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

தீப திருவிழா பாதுகாப்பு தி.மலையில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, டிச.,4ல் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. டிச.,13ல் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. விழாவில், 35 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா முன்னேற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், வேலுார் சரக டி.ஐ.ஜி., தேவராணி, திருவண்ணாமலை எஸ்.பி., சுதாகர் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். பக்தர்கள் கோவிலிற்குள் வரும் வழி, வெளியே செல்லும் வழி, கோவிலிற்குள் எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை