உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / உழவின் போது சிக்கிய சிசு சடலம்

உழவின் போது சிக்கிய சிசு சடலம்

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அருகே உழவு செய்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை சடலம் கிடைத்தது. இது தொடர்பாக, சிசுவின் தாயை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரியகள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர், குத்தகை எடுத்துள்ள விவசாய நிலத்தில், நேற்று முன்தினம் மாலை டிராக்டரில் உழவு செய்தார். அப்போது, பச்சிளம் ஆண் குழந்தை சடலம் வெளியே வந்துள்ளது. தச்சம்பட்டு போலீசார் விசாரித்தனர். அந்த நிலத்தின் அருகே வசிப்பவர் மேகலா, 39. இவரது கணவர் கொரோனா காலத்தில் உயிரிழந்தார். இவருக்கு மனநிலை பாதித்த இரு மகன்கள் உள்ள நிலையில், அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த உறவினருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதில் கர்ப்பமான அவருக்கு, 10ம் தேதி மாலை வீட்டிலேயே ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அதை விவசாய நிலத்தில் புதைத்தது தெரிய வந்தது. தச்சம்பட்டு போலீசார் மேகலாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை