உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பர்வதமலை ஏறி இறங்கிய பெங்களூரு மாணவர் பலி

பர்வதமலை ஏறி இறங்கிய பெங்களூரு மாணவர் பலி

கலசப்பாக்கம்:கலசப்பாக்கம் அருகே பர்வதமலை ஏறிய பெங்களூரு கல்லுாரி மாணவர் மயங்கி விழுந்து பலியானார். கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த பெல்லாரி தேவி நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார், 21; பொறியியல் கல்லுாரி இரண்டாம் ஆண்டு படித்தார். தன் நண்பர்கள் மூவருடன், நேற்று முன்தினம், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, 4,560 அடி உயர பர்வதமலையில் உள்ள, மரகதாம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.சுவாமி தரிசனம் செய்த பின், மலையிலிருந்து கீழே இறங்கினார். இரவு, 7:00 மணிக்கு மலை அடிவாரத்திற்கு வந்த நிலையில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். ஆதமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !