உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கிணற்றில் தாய், மகன் சடலங்கள்

கிணற்றில் தாய், மகன் சடலங்கள்

கலசப்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலத்தை சேர்ந்தவர் ஹேமலதா, 30. இவரது கணவர் தினேஷ், ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர், தன் மகன் கிஷோர் சாய்ராம், 9, மகள் நிரஞ்சனாஸ்ரீ, 4, மாமனார் ஜெயவேல், மாமியார் கலா ஆகியோருடன் வசித்து வந்தார்.கடந்த, 18ம் தேதி இரவு, தன் குழந்தைகளுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த ஹேமலதா, மகன் கிஷோர் சாய்ராம் இருவரும் காணாமல் போனதால், ஜெயவேல் அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, அவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றில், இரு சடலங்கள் மிதப்பதாக அவ்வழியாக சென்றவர்கள், கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போளூர் தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்டனர். அது ஹேமலதா, கிஷோர் சாய்ராம் என்பது தெரியவந்தது.கலசப்பாக்கம் போலீசார், தாய், மகன் இறந்தது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை