அக்கா தற்கொலையால் பகை மாமாவை கொன்றார் மைத்துனர்
செய்யாறு:செய்யாறு அருகே, அக்கா தற்கொலை செய்து கொண்டதால் உண்டான பகையில், மாமாவை குத்திக்கொன்ற மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஆராத்தி வேலுாரை சேர்ந்தவர் தணிகைவேலு, 35; தொழிலாளி. இவர் விஜயலட்சுமி என்பவரை காதலித்து, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.திருமணமான ஒரு மாதத்தில், குடும்ப தகராறில் விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதனால், தணிகைவேலுவிற்கும், விஜயலட்சுமியின் தம்பியான லாரி டிரைவர் ராஜா, 34, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், அப்பகுதியிலுள்ள அசனமாபேட்டை ஏரிக்கரையிலுள்ள கன்னியம்மன் கோவில் அருகே தணிகைவேலு நின்றிருந்தார். அப்போது, அங்கு சென்ற ராஜா, அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியதில், சம்பவ இடத்திலேயே தணிகைவேலு உயிரிழந்தார். மோரணம் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜாவை தேடி வருகின்றனர்.