டாக்டர் கூட்டு பலாத்காரம் சிறுவனுக்கும் 20 ஆண்டு
திருவண்ணாமலை:பெண் டாக்டர் கூட்டு பலாத்கார வழக்கில், சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.வேலுார் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த பீஹாரை சேர்ந்த பெண் டாக்டர், நண்பரான நாக்பூரை சேர்ந்த ஆண் டாக்டருடன், 2022 மார்ச், 16 இரவில், வேலுாரிலிருந்து காட்பாடிக்கு சென்றபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்தி, பெண் டாக்டரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, 40,000 ரூபாய், 2 சவரன் நகை, மொபைல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியது.இதில், 17 வயது சிறுவன் உட்பட, ஐந்து பேரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்தனர். இதில், நான்கு பேருக்கு ஜன., 30ல், வேலுார் மகளிர் நீதிமன்றத்தில், 20 ஆண்டு சிறை தண்டனை, தலா, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சிறுவன் குறித்த வழக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சிவக்குமார், நேற்று, சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறை, 23,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.