உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மின்சாரம் தாக்கி விவசாயி பலி: உறவினர்கள் மறியல்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி: உறவினர்கள் மறியல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. விவசாயி. நேற்று அறுந்த ஒயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு, உறவினர் மற்றும் பொதுமக்கள். சடலத்துடன் புதுமல்லாவாடி மின்சார வாரிய அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து உடலை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்தப் போராட்டம் காரணமாக, வேலூர் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரமாக சாலையில் வாகனங்கள். நீண்ட வரிசையில் காத்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ