விவசாயி பலி தந்தை, மகன் கைது
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்குளத்துாரை சேர்ந்த விவசாயி பழனி, 60, மகன் மணிகண்டன், 27. அதே ஊரை சேர்ந்தவர் பச்சையப்பன், 85, என்பவர் அக்., 25ல் பழனி விவசாய கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், பச்சையப்பன் மின்சாரம் பாய்ந்து பலியானது தெரிந்தது. காட்டு பன்றிகளை கொல்ல, பழனி அமைத்த மின் வேலியில் சிக்கி பச்சையப்பன் இறந்துள்ளார். அதை மறைக்க, பச்சையப்பன் கிணற்றில் விழுந்து இறந்தது போல் நம்ப வைக்க, தந்தை, மகன் கிணற்றில் சடலத்தை வீசியது தெரியவந்தது. பழனி, மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.