மேலும் செய்திகள்
விவசாயி பலி தந்தை, மகன் கைது
11 hour(s) ago
மகளை காதலித்த வாலிபரை அடித்து கொன்ற தந்தை சரண்
25-Oct-2025
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே, மகளின் சாவில் சந்தேகம் உள்ளது என தந்தை புகார் படி, இளம்பெண்ணின் சடலம் தோண்டி எடுத்து மீண்டும் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் முனீர்பாஷா, தொழிலாளி; இவர் மனைவி சமிபாபீ, 28; இவர்களுக்கு, 3 பெண் குழந்தைகள். குடும்ப தகராறில் சமிபாபீ கடந்த, 6 ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, சேத்துப்பட்டு அடுத்த பழம்பேட்டையிலுள்ள இடுகாட்டில் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், சமிபாபீயின் சாவில் சந்தேகம் உள்ளதாக, அவரது தந்தை சாதீக்பாஷா, சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, சமிபாபீயின் உடலை, மறு உடற்கூறு ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்று சேத்துப்பட்டு பழம்பேட்டை இடுகாட்டில் தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையில் சமிபாபீயின், உடல் தோண்டி எடுக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், மறு உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் சடலம் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
11 hour(s) ago
25-Oct-2025