வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்பல்லாம் தமிழ் பக்தர்களை விட வடக்ஸ், ஆந்திராஸ் அதிகமாயிட்டாங்க. அங்கே இருக்கும் ஜோசியர்கள் அண்ணாமலையார் கிவிலுக்குப் போய் சாந்தி பரிகாரம் பண்ணுங்கன்னு கெளப்பி உடறாங்க.
திருவண்ணாமலை': திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐந்து மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலையில், வார விடுமுறை நாட்களில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கானோர் கோவிலிற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் செல்கின்றனர்.வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையான நேற்று, பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், அருணாசலேஸ்வரர் கோவிலில், 1 கி.மீ., துாரத்திற்கு நீண்ட வரிசையில், ஐந்து மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில், ஒரு பெண் பக்தரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர், போலீசார் அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பினர்.கோவில் உள்பகுதியில் பக்தர்களுக்கு முறையாக எவ்வித வசதிகளும் செய்யாததால், தள்ளு முள்ளு ஏற்பட்டு, 15 நாட்களுக்கு முன்பு, இரு முறை பக்தர்களிடையே கை கலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
இப்பல்லாம் தமிழ் பக்தர்களை விட வடக்ஸ், ஆந்திராஸ் அதிகமாயிட்டாங்க. அங்கே இருக்கும் ஜோசியர்கள் அண்ணாமலையார் கிவிலுக்குப் போய் சாந்தி பரிகாரம் பண்ணுங்கன்னு கெளப்பி உடறாங்க.