உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ரூ.1 கோடி கேட்டு தாய், மகளை கடத்திய 8 பேர் கும்பல் கைது

ரூ.1 கோடி கேட்டு தாய், மகளை கடத்திய 8 பேர் கும்பல் கைது

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில், ஏ.பி.ஆர்., எனும் பெயரில் தாசிப், 39, என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். பல கோடி ரூபாயை அவர் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். நிதி நிறுவன உரிமையாளர் தாசிப்பின் மனைவி சப்ரின்பேகம், 32, ராணிப்பேட்டை மாவட்டம், நவல்பூரிலுள்ள தன் தாய் வீட்டில், 3 வயது மகள் அல்வினா மரியத்துடன் வசிக்கிறார்.கடந்த, 18ம் தேதி, இருவரையும் கடத்தி, ஒரு கோடி ரூபாய் கேட்டு, போனில் மிரட்டுவதாக, ராணிப்பேட்டை போலீசில், சப்ரின்பேகத்தின் தாய் ஹாயத்துன் பேகம் புகார் செய்தார். போலீசார் தனிப்படை அமைத்து, கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.இந்நிலையில், ராணிப்பேட்டை - சோளிங்கர் ரோட்டில் சமையல் எரிவாயு காஸ் கிடங்கு அருகே, கடத்தி வைத்திருந்த இருவரையும் போலீசார் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட, வாலாஜா வசந்தகுமார், 34, உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய, 'ஹூண்டாய் அசென்ட்' கார், டாடா சுமோ கார் மற்றும் அவர்கள் வைத்திருந்த, 5 லட்சம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ