உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / இணை ஆணையரை கண்டித்து தி.மலையில் குருக்கள் தர்ணா

இணை ஆணையரை கண்டித்து தி.மலையில் குருக்கள் தர்ணா

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக, கோவில் வளாகத்தில் குருக்கள் ஆறு பேர் தர்ணா செய்தனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், குருக்கள் இளவரசு பட்டம் ரமேஷ், கோவில் நன்கொடையாளர் சிலரை தரிசனத்திற்கு நேற்று அழைத்து சென்றார். இதைப்பார்த்த இணை ஆணையர் ஜோதி, 'நீ என்ன இடைத்தரகரா?' என, ஒருமையில் கேட்டார்.ரமேஷ் குருக்கள், 'கோவில் நன்கொடையாளர்களை தான் நான் அழைத்துச் சென்றேன்; பணம் வாங்கி கொண்டு யாரையும் அழைத்து செல்லவில்லை' என, கூறினார். 'அதற்கு என்னிடம் அனுமதி பெற்றுத்தான் நீ அழைத்துச் செல்ல வேண்டும்' என, அனைத்து பக்தர்கள் முன்னிலையில் அவரை ஒருமையில் பேசியுள்ளார்.இதையடுத்து, இணை ஆணையரை கண்டித்து, பூஜையில் ஈடுபட்டிருந்த குருக்கள் ஆறு பேர், பூஜைக்கு இடையூறு இல்லாமல், யாக சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர். அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் உறுப்பினர்கள் குருக்களிடம் பேச்சு நடத்தி, தர்ணாவை கைவிட செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ