உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள்

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள்

திருவண்ணாமலை:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தவசி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் உதயன், 43; தொழிலாளி. இவர், 2018 ஜூன் மாதம், ஒரு வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். செய்யாறு அனைத்து மகளிர் போலீசார், அவரை போக்சோவில் கைது செய்தனர்.திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ கோர்ட் நீதிபதி காஞ்சனா, நேற்று முன்தினம் மாலை உதயனுக்கு ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை