உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மின்தடை புகார் அளித்தவரை மிரட்டிய லைன்மேன் சஸ்பெண்ட்

மின்தடை புகார் அளித்தவரை மிரட்டிய லைன்மேன் சஸ்பெண்ட்

போளூர்:மின்தடை குறித்து புகார் கூறிய நெசவு தொழிலாளியை மிரட்டிய மின்வாரிய லைன்மேன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வடமாதிமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட, கீழ்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நெசவு தொழிலாளி கணேசன், 38. அவர் வசிக்கும் பகுதியில் கடந்த, 10ம் தேதி காலை மின்தடை ஏற்பட்டதால், கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கணேசன் புகார் தெரிவித்தார். அதன்படி நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள், அப்பகுதியை சேர்ந்த லைன்மேன் முருகன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த முருகன், கீழ்பட்டு கிராமத்திற்கு சென்று கணேசனை, 'மின்சாரம் பற்றி உனக்கு என்ன தெரியும். இரவில் காற்று வீசும்போது மின்தடை ஏற்படும். உடனடியாக எப்படி சரிசெய்ய முடியும். இனி புகார் தெரிவித்தால், டி.எஸ்.பி., மற்றும் டவுன் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக உள்ள என் மச்சானிடம் கூறி உன்னை உள்ளே தள்ளி விடுவேன்' என, மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ பரவியது.இதுகுறித்து, போளூர் மின்கோட்ட செயற்பொறியாளர் குமரன் விசாரித்து, லைன்மேன் முருகனை, சஸ்பெண்ட் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி