மேலும் செய்திகள்
பைக் - லாரி மோதல் 2 வாலிபர்கள் பலி
25-Sep-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் வெங்கடேசன், 48, ஏழுமலை, 53. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், வானாபுரத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று இருவரும் மது வாங்கி குடித்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த ஏழுமலை, மது பாட்டிலை உடைத்து, வெங்கடேசனை குத்தியதில் அவர் உயிரிழந்தார். வாணாபுரம் போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.
25-Sep-2025