உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தொழிலாளியை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்

தொழிலாளியை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்

செங்கம்: செங்கம் அருகே தொழிலாளியை கொல்ல முயன்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் மேல் புழுதியூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன், 40; தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியிலுள்ள அவரது மாமியார் வீட்டின் மொட்டை மாடியில் துாங்கினார். நள்ளிரவில், அடையாளம் தெரியாத, மூன்று பேர் அவரை, அரிவாளால் தலை, முகம், நெற்றி, கைகளில் வெட்டினர். மஞ்சுநாதன் அலறி சத்தமிட்டதில், அவர்கள் அங்கிருந்து தப்பினர். அலறல் சத்தம் கேட்டுவந்த உறவினர்கள், ரத்த காயங்களுடன் கிடந்த மஞ்சுநாதனை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை