மேலும் செய்திகள்
பேரூராட்சி கடைகளின் ஏல தேதி ஒத்திவைப்பு
29-May-2025
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் பஞ்சாயத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க, இடையூறாக உள்ள மரத்தை அகற்ற நாளை ஏலம் (20ம் தேதி) நடைபெற உள்ளது.இது குறித்து, காங்கேயம் பி.டி.ஓ., அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கேயம் ஒன்றியம், நத்தக்காடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சக்கர பாளையம் சிவக்குமார் கட்டடம் முதல், பாண்டியன் மண்டபம் வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு இடையூறாக உள்ள வேப்பமரம் மாநில நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மரத்திற்கு மதிப்பு தொகை, ரூ.1,277 என வனத்துறையிலிருந்து பெறப்பட்டுள்ளது.இந்த தொகைக்கு குறையாமல் பொது ஏலம், நத்தக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாளை 20ம் தேதி காலை 11:00 மணியளவில் நடைபெற உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வைப்புத்தொகை, 1,000 ரூபாய் செலுத்தி கலந்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு ஈடாக வேறொரு இடத்தில், 10 புதிய மரக்கன்றுகள் நடவும், ஏலம் முடிந்தவுடன் முழுத்தொகை, வரி உட்பட செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
29-May-2025