ரூ.1.49 கோடி மோசடி வழக்கு: கூட்டுறவு ஊழியர்கள் இருவர் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சொர்ப்பனந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் சீனிவாசன், விற்பனையாளர் வெங்கடேசன் ஆகியோர் பணியாற்றிய காலத்தில், 2020- 2022 வரை வரவு, செலவு கணக்கு குறித்து தணிக்கை நடத்தப்பட்டது. இதில், இருவரும் இணைந்து, பொதுமக்கள் செலுத்திய டிபாசிட் தொகை மற்றும் நகை கடன் வழங்கிய வகையில், 1 கோடியே, 49 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. நடவடிக்கை எடுக்க கோரி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் சார்பில் கொடுத்த புகார்படி, திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் சீனிவாசன், வெங்கடேசனை கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.