உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மழைநீரில் விழுந்த மாணவர் பலி

மழைநீரில் விழுந்த மாணவர் பலி

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி விஜி மகன் பார்த்திபன், 9; அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தார். அதே பகுதியில் குணசீலன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக சில நாட்களுக்கு முன், பில்லர் அமைக்க, 3 அடி ஆழம் குழி தோண்டினார்.தற்போது, மழையால் பணி நடக்கவில்லை. குழியில் மழை நீர் தேங்கியது. மாணவன் பார்த்திபன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, குணசீலன் வீடு கட்ட தோண்டிய குழியில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை