உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / இன்ஸ்பெக்டரை தாக்கிய கோவில் ஊழியர் கைது

இன்ஸ்பெக்டரை தாக்கிய கோவில் ஊழியர் கைது

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம். இவரது சகோதரர் ஸ்ரீதரன். தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது குடும்பத்தை சேர்ந்த சிவசங்கரி, கடந்த மாதம், 27ம் தேதி, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை, அங்கிருந்த தேசூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் காந்திமதி, மற்ற பக்தர்களுக்கு மறைக்காமல் தரிசனம் செய்ய கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த ஸ்ரீதரன், பக்தர்கள் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் காந்திமதியின் கன்னத்தில், 'பளார்' என அறைந்ததில், அவர் நிலை குலைந்தார்.ஸ்ரீதரனுக்கு ஆதரவாக கோவில் ஊழியர் ரமேஷ், 32, செயல்பட்டார். திருவண்ணாமலை டவுன் போலீசார், ஸ்ரீதரன், சிவசங்கரி, கோவில் ஊழியர் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மூன்று பேரும் தலைமறைவான நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில் ஊழியர் ரமேஷை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து தலைமறைவாக உள்ள தி.மு.க. நிர்வாகி ஸ்ரீதரன், சிவசங்கரி ஆகியோரை தேடி வருகின்றனர். ஏற்கனவே இரு முறை, ஸ்ரீதரன் மற்றும் சிவசங்கரி ஆகியோரின் ஜாமின் மனுவை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ