மேலும் செய்திகள்
வியாபாரி வீட்டில் 20 பவுன் திருட்டு
02-Jun-2025
மின்கம்பியை மிதித்த தாத்தா, பேரன் பலி
22-May-2025
வேலுார், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆத்துாரை சேர்ந்தவர் சதீஷ், 28. இவருக்கும், வேலுார் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பாட்டையூரை சேர்ந்த ரேகா, 23, என்பவருக்கும் கடந்த, 8ம் தேதி,ஆரணியில் திருமணம் நடந்தது. மறுநாள், 9ம் தேதி சதீஷ், மனைவி ரேகாவுடன் பாட்டையூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டிலிருந்து வெளியே சென்ற ரேகா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதில், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ரேகாவை பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து சதீஷ், கடந்த, 12ல், வேலுார் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அணைக்கட்டு அடுத்த தேவகாரன்பட்டியை சேர்ந்த அவரது காலதனுடன் ரேகா சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
02-Jun-2025
22-May-2025