உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கதவை உடைத்து வி.சி., நிர்வாகி கைது

கதவை உடைத்து வி.சி., நிர்வாகி கைது

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாத்துாரை சேர்ந்தவர் முருகன். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர்களுக்கு இடையே நில தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.ஆரணியை சேர்ந்த வி.சி., முன்னாள் மாவட்ட செயலர் பாஸ்கரன், 52, உள்ளிட்ட சிலர், கிருஷ்ணனுக்கு ஆதரவாக சென்று, முருகன் நிலத்தையும், பொருட்களையும் சேதப்படுத்தியதால், தேசூர் போலீசில் முருகன் புகார் செய்தார்.பாஸ்கரன், கிருஷ்ணன், வினோத், பிரியா உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வந்தவாசி டி.எஸ்.பி., கங்காதரன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாஸ்கரன் வீட்டிற்கு நேற்று காலை சென்று, அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது, பாஸ்கர் வீட்டிலிருந்து வெளியே வர மறுத்தார். நீண்ட பேச்சுக்கு பின், போலீசார் ஆரணி ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், தாசில்தார் கவுரி முன்னிலையில் வீட்டின் கதவை உடைத்து, அதிகாலை, 5:00 மணிக்கு அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை